Wednesday, March 3, 2010

ஒரு சம்பவம். ஒரு குற்ற உணர்ச்சி

நேற்று இரவிலிருந்து, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இதே செய்தி தான் திரும்ப திரும்ப பார்க்கப்படுகிறது.

"நித்யானந்தா "ர" நடிகையுடன்__________"

முதலில் பார்த்தவுடன், சுர்ரென்று கோபம் வந்தது. பின்பு இதை வைத்து இந்து மதத்தை கேவலப்படுத்துவார்களே என்று வருத்தம் வந்தது. மெல்ல நேரமாக நேரமாக முன்பெழுந்த உணர்ச்சிகள் மட்டுப்பட தெளிவாக யோசிக்க முடிந்தது.

டிஸ்கி:

1) நான் நித்யானந்தாவின் சீடன் அல்ல.(இன்னர் டிஸ்கி : யாருக்கும் சீடன் அல்ல)
2) நடந்த விஷயங்கள் நியாயம் என்றோ அநியாயம் என்றோ எனக்கு எந்த சார்பு கருத்தும் இல்லை.

வீடியோவில் நான் கவனித்தை விஷயங்களை நான் சொல்லியே ஆகவேண்டும்.
1) முதல் உறுத்தல் கேமிரா, நல்ல வசதியான, தெளிவாக தெரியக்கூடிய இடத்தில் பொருத்தப் பட்டுள்ளது தான். வழக்கமாக, இது போன்ற கேமிரா, தெளிவாக தெரியும் வண்ணம் பொருத்த முடியாது.
2) அந்த வீடியோவில் சாமியாரிடமிருந்து நிரைய மூவ்மென்டுகளைக் காணோம். "ர" நடிகைதான் அவர் மேல் அடிக்கடி விழுகிறார்.
3) அநேகமான நேரங்களில் நித்யானன்தா உண்பதுவும், TV பார்ப்பதுவுமாக உள்ளார்.

இவைகளை வைத்து பார்க்கையில் திட்டமிடப் பட்ட பொறியில் விழுந்துள்ளார் என்று நினைக்கத் தோணுகிறது. அவருக்கு "ர" நடிகையுடன் தொடர்பு இல்லை என்றோ, அவர் அப்பாவி என்றோ நான் சொல்ல வரவில்லை. இந்த கேமிரா விஷயம் ஒரு சதியாக கூட இருக்கலாம் என்று தோண்றுகிறது.

குறுகிய காலத்தில் நிறைய சம்பாதித்துள்ளார். அரசியல்வாதிகளுடன் தொடர்பில்லாமல் இவ்வளவு காரியங்களை சாதிக்க முடியாது. லாபத்தை பங்கு பிரிப்பதில், அல்லது அதிகார ஆசையோ கூட இந்த சதிக்கு பின் இருக்கலாம். நம்ம ஊர் "வட்ட செயலாளர் வண்டு முருகன்" இடம் வம்பு வைத்துக் கொண்டால் கூட நம்மால் சமாளிக்க முடியாத அளவுக்கு பிரச்சனைகளை கொடுப்பார்கள். இந்த ஆசிரம வளர்ச்சியில் கண்டிப்பாக பெரிய தலைகளின் பங் கு நிறைய இருக்க வாஇப்பு இருக்கிறது. ஆள்பவர்களுடன் சின்னதாக முறைத்துக் கொண்டால் கூட அவஸ்தை பட வேண்டி இருக்கும்.

சரி, நித்தியானந்தர் மீது நமக்கு ஏன் இவ்வளவு கோபம் வரவேண்டும் என்று புரியவில்லை. அந்த வீடியோவிலிருந்து அவர், "ர" நடிகையை கற்பழிக்கவில்லை என்று தெரிகிறது. இந்து தர்மத்தில் இல்லறம் தவிர்க்கப்பட வேண்டியது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மார்த்துவர்கள் திருமணத்திற்க்குப் பிறகே சந்நியாசம் பூணுவார்கள். புராணங் களில் வரும் ரிஷிகளும், முனிவர்களும் திருமணமானவர்கள் தான். ஆனால் பிரம்மசரியம் பற்றி பிரசங்கம் செய்யும் சாமியார் பெண்ணாசை கொண்டது நகைப்புக்குறிய முரண். அவருக்கு இனி உபதேசம் செய்ய தகுதி இல்லை. ஆனால் நடிகையுடன் தொடர்பு என்பது அந்த இருவரின் தனிப்பட்ட விஷயம். தன்னை உண்மையாக நம்பும் சீடர்களை ஏமாற்றியது ஒன்று தான் அவர் செய்த தவறாக எனக்கு படுகிறது. இதில் மீடியா காட்டும் அதீத அக்கறை தேவையில்லாதது.

பற்றில்லாத சாமியார், துண்டு கோவணத்தை பத்திரப்படுத்த நினைக்க, அதன் பின் ஒவ்வொரு தேவையாக சேர சேர அது அவர் கல்யாணத்தில் முடிந்த கதை தான் நினைவுக்கு வருகிறது.

ஆனால் ஒன்று நிச்சயமாக புரிகிறது. நம்மால் புரிந்து கொள்ள முடியாத நிறைய அரசியல் / பொருளாதார / சமூகவியல் விளையாட்டுகள் இதில் உள்ளன.